விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

vinoth

திங்கள், 5 மே 2025 (09:19 IST)
நேற்று நடைபெற்ற முக்கியமானப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் அந்த அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்புக் குறைந்துள்ளது.

லக்னோ அணித் தொடர்ந்து தோல்விகளை சந்திக்க அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற ஆட்டமும் ஒரு காரணம். நேற்றையப் போட்டியில் பண்ட் வழக்கம் போல சொதப்பில் 17  பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியில் அவர் அவுட்டானவிதம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அஸ்மத்துல்லா ஓமர்சாய் வீசிய பந்தில் இறங்கி வந்து அடித்த ரிஷப் பண்ட்டின் கைநழுவி பேட் லெக் ஸைடில் பறந்தது. ஆனால் அவர் அடித்த பந்து பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி ஆஃப் ஸைடில் இருந்த ஷஷாங்க் சிங்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட் ஆனார்.
 

Wait… what just happened? ????

Bat in the air, ball in the fielder’s hands... Rishabh Pant’s dismissal had it all ????

Updates ▶ https://t.co/YuAePC273s#TATAIPL | #PBKSvLSG pic.twitter.com/Q74gb4Lpu4

— IndianPremierLeague (@IPL) May 4, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்