டி 20 தொடரில் களமிறங்கும் மேக்ஸ்வெல்.. இந்திய அணிக்கு பெரும் சவாலா?

Siva

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (17:57 IST)
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை முடித்த பிறகு, வரும் அக்டோபர் 29 முதல் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது.
 
இந்த தொடருக்காக, காயம் காரணமாக ஓய்வில் இருந்த அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் இணைந்துள்ளார். நியூசிலாந்து தொடருக்கு முன்னதாக ஏற்பட்ட கை விரல் எலும்பு முறிவிலிருந்து அவர் குணமடைந்துள்ளார்.
 
மேக்ஸ்வெல்லுடன், 20 வயது இளம் வீரரான மாலி பியர்டுமேனும் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்தவர்.
 
வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் முதல் இரண்டு போட்டிகளிலும், ஆல்ரவுண்டர் சீன் அப்பாட் முதல் மூன்று போட்டிகளிலும் மட்டுமே விளையாடுவார்கள். மேக்ஸ்வெல்லின் வருகை, டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்