ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

Mahendran

வியாழன், 23 அக்டோபர் 2025 (13:08 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அடிலெய்டு மைதானத்தில் நடந்துவந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 264 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு 265 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
 
முன்னதாக, டாஸ் தோல்வியை தழுவிய இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடி 73 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக ஷ்ரேயஸ் ஐயர் 61 ரன்கள் எடுத்தார். இருவரும் ஆட்டமிழந்த பிறகு, அக்சர் படேல் ஓரளவு நிலைத்து நின்று ஆடி 44 ரன்கள் எடுத்தார்.
 
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து, 265 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இன்னும் சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர்.
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், தொடரை வென்றுவிடும் என்பதால், அவர்களை கட்டுப்படுத்த இந்திய அணி தீவிரமாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்