ஆனால் அவர் தான் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார். தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வரும் அவர் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்களின் பட்டியலில் கங்குலியை முந்தி மூன்றாம் இடத்துக்கு சென்றுள்ளார். அவர் ஒரு நாள் போட்டிகளில் 11, 249 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு முன்பாக சச்சின் மற்றும் கோலி ஆகியோர் உள்ளனர்.