இந்தியாவின் தோல்விக்கு இதுதான் காரணம்… பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சொல்லும் காரணம்!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (11:43 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் அதில் இந்திய அணி பரிதாபகரமாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி மோசமான பேட்டிங் காரணமாக அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே சேர்த்தது. பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கான 182 ரன்களை எளிதாக சேர்த்தது.

இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த தோல்வி பற்றி பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஒருவர் நிலைத்து நின்று ஆடாததே மோசமான பேட்டிங்குக்கு காரணம் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “ பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளம் இல்லை என தெரியும். இதுல் 230 ரன்கள் எடுத்தாலே போதும் என நினைத்தோம். ஆனால் கில் விக்கெட் விழுந்தபிறகு விக்கெட்கள் மளமளவென விழ ஆரம்பித்தன. நிலைத்து நின்று ஆடும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்தான் அணிக்கு தேவை. அப்படி ஒருவர் அந்த வேலையை செய்திருந்தால் 240 ரன்கள் எடுத்திருப்போம்.” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்