சூர்யகுமார் யாதவ்வுக்கு ஏன் அதிக வாய்ப்புகள்… பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2023 (11:28 IST)
கடந்த ஆண்டில் இருந்து டி 20 போட்டிகளில் அசுர பார்மில் இருந்து ரன்மெஷினாக வலம் வந்த சூர்யகுமார் யாதவ். அதையடுத்து அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் அவர் அந்த பார்மட்டில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இப்படி சொதப்புவதால், அவர் டி 20 போட்டிகளுக்கு மட்டுமே ஸ்பெஷலிஸ்ட் வீரராக உள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இப்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் மோசமாக விளையாடி வரும் அவர் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவரது பேச்சில் ”அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் டி 20 மற்றும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அளவுக்கு சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. இதை அவரே ஒப்புக்கொள்வார்.

ஒருநாள் போட்டிகள் குறித்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு வருகிறார். மிடில் ஓவர்களில் விளையாடுவது குறித்து கற்றறிந்து வருகிறார். அவரிடம் உள்ள திறமைக்காக அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்குவோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்