ஐபிஎல் சீசனில் இன்று ஒரு நாளிலேயே ஐபிஎல்லின் மூன்று முக்கியமான அணிகள் இடையேயான போட்டிகள் நடைபெற உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த ஐபிஎல் சீசனில் 10 அணிகள் இடையேயான முதற்சுற்று போட்டிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் Revenge Week போட்டிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் இன்று மதியம் 3.30 மணி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்கின்றன. மாலை 7.30 மணி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொள்ளும் Great Rivalry போட்டி நடைபெற உள்ளது.
ஏற்கனவே இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் வைத்து சிஎஸ்கே, மும்பை அணியை வீழ்த்திய நிலையில், இன்று வான்கடேவில் நடக்கும் போட்டியில் கடந்த தோல்விக்கு மும்பை அணி பதிலடி தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதுபோல பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்சிபியின் ஹோம் க்ரவுண்டான சின்னச்சாமியிலேயே ஆர்சிபியை அடித்து வென்றுவிட்டு சென்றது. இந்நிலையில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை அதன் ஹோம் க்ரவுண்டான சண்டிகர் மைதானத்தில் எதிர்கொள்ளும் ராயல் சேலஞ்சர்ஸ் அதே பதிலடியை கொடுக்குமா என்ற ஆர்வம் ரசிகர்களிடையே உள்ளது.
அதனால் இன்று மதியம் 3.30 தொடங்கி இரவு 11 மணி வரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு அன்லிமிடெட் எண்டெர்டெயின்மெண்ட் உறுதி என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K