கேப்டனிடமே முறைத்த இளம் வீரர்… மைதானத்தை விட்டு வெளியேற்றிய ரஹானே!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (08:56 IST)
இந்தியா தென் மண்டலம் மற்றும் மேற்கு மண்டல அணிகள் மோதிய துலிப் கோப்பை போட்டி நேற்று முடிந்தது.

இந்த போட்டியில் மேற்கு மண்டல இளம் வீரர் யாசஸ்வி ஜெய்ஸ்வால் எதிரணி வீரரான ரவி தேஜாவிடம் அநாகரிகமாக ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். இதுபற்றி நடுவர் கேப்டன் ரஹானேவிடம் முறையிட்டார். அப்போது இதுகுறித்து ரஹானே அவரிடம் சென்று பேசியபோது அவர் கேப்டனுக்கும் உரிய மரியாதை தராமல் ஒழுக்கக் கேடாக நடந்து கொண்டார்.

இதையடுத்து ரஹானே அவரை மைதானத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் துணிச்சலாக இந்த நடவடிக்கையை மேற்கொண்ட ரஹானேவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்ததற்காக ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்