புஜாரா & ரஹானே இடங்களில் இறங்கப்போவது யார்?

வெள்ளி, 4 மார்ச் 2022 (09:03 IST)
இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 10 ஆண்டுகளாக விளையாடிவந்த ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் இலங்கைக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் மோசமான பார்மில் இருந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் பங்களிப்புக்காக அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா தொடரின் தோல்விக்குப் பிறகு இப்போது அணியின் தலைமை ரோஹித் ஷர்மாவிடம் சென்றுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிராக இன்று தொடங்கவுள்ள டெஸ்ட் தொடரில் ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரும் கழட்டிவிடப்பட்டுள்ளனர். அணியில் பல இளம் வீரர்கள் காத்திருப்பதால் இனிமேல் அவர்கள் இருவரும் அணிக்குள் வருவது கடினம் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அவர்களுக்கான கதவு முழுவதுமாக மூடப்படவில்லை என இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் புஜாரா மற்றும் ரஹானே இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. இப்போது அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் விலக்கப்பட்டுள்ளதால், அவரின் இடத்தில் இறங்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புஜாராவின் இடத்தில் ஷுப்மன் கில் அல்லது மயங்க் அகர்வால் இறக்கப்படலாம் என்றும் ரஹானேவின் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இறங்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்