ரஹானே மற்றும் புஜாராவுக்கு ஷாக் கொடுத்த பிசிசிஐ… புதிய சம்பள ஒப்பந்தம் அறிவிப்பு!

வியாழன், 3 மார்ச் 2022 (09:37 IST)
இந்திய கிரிக்கெட் வாரியம் நடப்பு ஆண்டுக்கான வீரர்களின் சம்பள ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலகின் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த கிரிக்கெட் வாரியமாக இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது. ஐசிசி க்கு ஆண்டுதோறும் கிடைக்கும் வருமானத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து செல்லும் தொகை கணிசமானது. இந்தியாவுடன் கிரிக்கெட் போட்டிகளை நடத்த எல்லா நாடுகளும் ஆர்வமாக இருக்க இதுவும் ஒரு காரணம்.

அதனால் பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அதிகளவில் சம்பளம் கொடுத்து வருகிறது. சம்பளத்தை நான்கு வெவ்வேறு வகைகளில் வைத்து கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான புதிய சம்பள ஒப்பந்த பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சமீபகாலமாக மோசமாக விளையாடி வரும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் A பிரிவில் இருந்து B பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதனால் அவர்களின் ஆண்டு ஊதியம் 5 கோடியில் இருந்து 3 கோடியாக குறைந்துள்ளது.

விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் பூம்ரா ஆகியோர் ஏ+ பிரிவில் வைக்கப்பட்டு அவர்களுக்கு 7 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளது. மற்ற வீரர்களை ஏ, பி மற்றும் சி என வகைப்படுத்தி 5 கோடி, 3 கோடி மற்றும் 1 கோடி என சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளது பிசிசிஐ.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்