ஒரே பெயரில் இரண்டு வீரர்கள்… தவறான வீரரை ஏலத்தில் எடுத்ததா பஞ்சாப் கிங்ஸ்?

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (08:35 IST)
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான மினி ஏலம் சில தினங்களுக்கு முன்னர் துபாயில் நடந்து முடிந்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்த ஐபிஎல் ஏலத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. ஷசாங் சிங் என்ற பெயரில் இரண்டு வீரர்கள் இருந்த நிலையில் அதில் தாங்கள் விரும்பிய ஷசாங் சிங்கை வாங்காமல் வேறொரு வீரரை பஞ்சாப் அணி வாங்கியதாகவும், அது சம்மந்தமாக பிசிசிஐயிடம் முறையிட்டதாகவும், ஆனால் அவர்கள் முடிந்தது முடிந்ததுதான் எனக் கூறிவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக பஞ்சாப் அணி சமூகவலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.

ஆனால் இப்போது பஞ்சாப் அணி அதற்கு ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில் “ஒரே பெயரில் இரண்டு வீரர்கள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் நாங்கள் சரியான வீரரைதான் ஏலத்தில் எடுத்துள்ளோம். அவர் பல நல்ல இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். அவருடைய திறமையை எங்கள் அணிக்காக காண காத்திருக்கிறோம்” எனக் கூறியுள்ளப்னர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்