வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இவ்வளவு தொகை தேவையில்லாதது… ஐபிஎல் ஏலம் குறித்து கவாஸ்கர் கருத்து!

புதன், 20 டிசம்பர் 2023 (09:52 IST)
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடருக்கான மினி ஏலம் நேற்று துபாயில் நடந்து முடிந்தது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இவருக்கு அடுத்த படியாக பேட் கம்மின்ஸ் 20.5 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள் இரண்டு பேருமே வேகப்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இருவரும் தாங்கள் வீசும் ஒவ்வொரு பந்துக்கும் 4 முதல் 5 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறவுள்ளனர்.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட்டர் சுனில் கவாஸ்கர் “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இவ்வளவு அதிக தொகை செல்வது தேவையில்லாதது. அவர்கள் நான்கு ஓவர்கள்தான் வீசப் போகிறார்கள். அவர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஆனால் ஆல்ரவுண்டர்களுக்கு அதிக தொகை செல்லலாம்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்