இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
இது சம்மந்தமாகப் பேசியுள்ளா புஜாரா “ராகுலை டாப் ஆர்டரில் இருந்து மாற்றக் கூடாது. ரோஹித் தொடக்க ஆட்டக்காரராக விளையாட விரும்பினால் கே எல் ராகுல் மூன்றாவது வீரராக விளையாட வேண்டும். ஷுப்மன் கில் வந்தால் கூட அவரை ஐந்தாவது வீரராக விளையாட வைக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த பிரதமர் அணிக்கு எதிரான போட்டியில் கே எல் ராகுலை தொடக்க ஆட்டக்காரராக இறங்கவைத்து தான் நான்காவது வீரராகக் களமிறங்கினார் ரோஹித் ஷர்மா.