நிதீஷ்குமார் ரெட்டி அதிரடி ஆட்டம்.. ஃபாலோ ஆனைத் தவிர்க்குமா இந்தியா?

vinoth
சனி, 28 டிசம்பர் 2024 (07:10 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று முன்தினம் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யப் போவதாக அறிவித்தார்.

ஆஸி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடினர். அதில், சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள், உஸ்மான் கவாஜா 57 ரன்கள், லாபுசாஞ்சே 72 ரன்கள்  ரன்கள் அடித்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் காரணமாக ஆஸ்திரெலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்தியா சார்பில் பும்ரா நான்கு விக்கெட்களையும் ஜடேஜா மூன்று விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய இந்திய அணி நேற்று 164 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்திருந்தது. இந்தியா சார்பில் ஜெய்ஸ்வால் 82 ரன்களும் கோலி 36 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்திருந்தனர். அதையடுத்து இன்று போட்டி தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ரிஷப்  பண்ட் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜடேஜாவும் அவுட்டாக நிதீஷ் குமார் ரெட்டி அதிரடியாக விளையாடி 40 ரன்களோடு களத்தில் உள்ளார். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 244 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்களை இழந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்