ஆஸி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடினர். அதில், சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள், உஸ்மான் கவாஜா 57 ரன்கள், லாபுசாஞ்சே 72 ரன்கள் ரன்கள் அடித்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் காரணமாக ஆஸ்திரெலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்தியா சார்பில் பும்ரா நான்கு விக்கெட்களையும் ஜடேஜா மூன்று விக்கெட்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.
இதையடுத்து இந்திய அணி தற்போது தங்கள் முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா 3 ரன்களிலும் ராகுல் 24 ரன்களிலும் ஆட்டமிழக்க, கோலி மற்றும் ஜெய்ஸ்வால் நிலைத்து நின்று 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழந்தனர். நைட் வாட்ச்மேனாக வந்த ஆகாஷ் தீப்பும் அவுட்டாக இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் சேர்த்துள்ளது. ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் தற்போது களத்தில் உள்ளனர்.