ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ்க்கு திரும்பியுள்ளது பல்வேறு கேள்விகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, குஜராத்திடம் இருந்து தங்கள் அணிக்கு இழுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது ஐபிஎல் விதிகளின் படி தவறு. அணிகள் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக் கொள்ள வேண்டுமானால நேரடியாக தங்களுக்குள்தான் பேசிக்கொள்ள வேண்டும். அதை விடுத்து வீரர்களிடம் நேரடியாக பேசுவது ஐபிஎல் விதிமீறல் ஆகும். இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இப்போது குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியையும் ஒரு ஐபிஎல் அணி தனிப்பட்ட முறையில் பேசி ட்ரேட் செய்ய முயன்று வருவதாக குஜராத் அணியின் சீஓஓ தெரிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. ஆனால் அது எந்த அணி என்பது குறித்து தெரிவிக்கவில்லை.