மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்காது- பாக். கேப்டன் விரக்தி!

vinoth
திங்கள், 24 பிப்ரவரி 2025 (09:42 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்து பாகிஸ்தான் அணி நிர்னயித்த இலக்கை இந்திய அணி மிக எளிதாக 43 ஆவது ஓவரில் எட்டியது. இந்த போட்டியில் கோலி அபாரமாக ஆடி சதமடித்தார்.

ஏற்கனவே நியுசிலாந்து அணிக்கெதிரான போட்டியிலும் தோற்றுள்ளதால் தற்போது இந்தியாவிற்கு எதிரான தோல்வி பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைந்துள்ளது. மற்ற அணிகளின் வெற்றி தோல்விகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் “எங்களின் சாம்பியன்ஸ் கோப்பை பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. மற்ற போட்டிகளின் முடிவுகளை சார்ந்து இருக்க நாங்கள் விரும்பவில்லை. இன்னும் ஒரு போட்டி உள்ளதால் சிறிய நம்பிக்கை உள்ளது. ஆனால் ஒரு கேப்டனாக மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குக் கடினமாக உள்ளது. எங்கள் தலைவிதி எங்கள் கைகளில் இருந்திருக்கவேண்டும்.” என விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்