அவருக்குப் பதில் துருவ் ஜுரெல் மாற்று விக்கெட் கீப்பராகப் பணியாற்றினார். பண்ட் வலியோடு பேட் செய்தார். இந்நிலையில் பண்ட்டின் விரல் வலி இனிமேல் குணமாகும் என தெரிவித்துள்ள ரியான், அவருக்கு விக்கெட் கீப்பிங் செய்வதால்தான் வலி அதிகமாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் விக்கெட் கீப்பிங் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். அவருக்கு வலி குறையாத பட்சத்தில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படலாம் என தெரிகிறது.