ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

vinoth

வெள்ளி, 18 ஜூலை 2025 (08:38 IST)
ஆஸி அணி தற்போது டெஸ்ட் விளையாடும் அணிகளில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக உள்ளது. அந்த அணியின் பேட்டிங்குக்கு இணையாக பவுலர்களும் நட்சத்திர அந்தஸ்து பெற்று உலக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அனைத்துப் போட்டிகளையும் வென்றது. அதற்கு அந்த அணி பவுலர்களின் பங்களிப்பு அளப்பரியது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் ஐந்து பவுலர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர். ஆஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் மூன்றாம் இடத்திலும், ஹேசில்வுட் நான்காம் இடத்திலும், ஸ்காட் போலண்ட் ஆறாவது இடத்திலும், நாதன் லியான் எட்டாவது இடத்திலும் மிட்செல் ஸ்டார்க் பத்தாவது இடத்திலும் இடம்பிடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்