இதே உத்வேகத்தோடு செயல்படுங்கள்: சதமடித்த விராத் கோஹ்லிக்கு தமிழக முதல்வர் பாராட்டு..!

Siva

திங்கள், 24 பிப்ரவரி 2025 (08:58 IST)
நேற்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி அபாரமான சதம் அடித்து, இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார். இதனை தொடர்ந்து, ஏராளமான ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விராட் கோலிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சாம்பியன்ஷிப் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதுகுறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலிக்கு எனது வாழ்த்துக்கள்! சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்ல இதய உத்வேகத்துடன் செயல்படுங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வரை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்