விராட் கோலியை எப்படி சமாளிக்கப் போகிறோம் என தெரியாவில்லை… இங்கிலாந்து வீரர் புலம்பல்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:50 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை எப்படி அவுட் ஆக்க போகிறோம் என்றே தெரியவில்லை என இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டி எதிர்வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டம் 5 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இங்கிலாந்திலிருந்து முன்கூட்டியே வரும் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர். இந்நிலையில் சென்னையில் இப்போது வீரர்கள் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘வீராட் கோலி இருக்கும் பார்மில் அவரை எப்படி அவுட் ஆக்கப்போகிறோம் என்பதே தெரியவில்லை. எனக்கு தெரிந்து அவர் இந்திய ஆடுகளங்களில் பலவீனமாக இருந்ததே இல்லை. ஆஸி தொடர் வெற்றி, குழந்தை பிறந்த மகிழ்ச்சி என அவர் பாஸிட்டிவ்வாக இருக்கிறார். அவருடன் விளையாடும் போது சக வீரர்களை ஊக்கப்படுத்துவார், அவரும் உற்சாகமாக விளையாடுவார்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்