காயமடைந்த வில்லியம்சனுக்கு விரைவில் அறுவை சிகிச்சை- உலகக் கோப்பையில் சந்தேகம்!

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (14:43 IST)
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் அந்த அணியால் கழட்டி விடப்பட்டார். இந்நிலையில் ஏலத்தில் அவர் கலந்துகொண்டார். ஏலத்தின் போது கேன் வில்லியம்சன் பெயர் வாசிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏலத்தொகை உயர்த்தப்படாததால் அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு குஜராத் அணி அவரை வாங்கியது. கடந்த ஆண்டில் அவரது ஏல மதிப்பு ரூ.14 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் குஜராத் அணிக்காக விளையாடினார். இந்த போட்டியில் பீல்டிங் செய்தபோது, காயமடைந்தார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து வில்லியம்சன் தற்போது சிகிச்சைக்குப் பிறகு நியுசிலாந்து நாட்டுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் வில்லியம்சனுக்கு இப்போது கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வில்லியம்சன் விரைவில் தொடங்க உள்ள 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையில் விளையாடுவது சந்தேகம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

ஒருவேளை அவர் விளையாடாவிட்டால், நியுசிலாந்து அணியை டாம் லாதம் கேப்டன் பொறுப்பேற்று வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த உலகக்கோப்பையில் நியுசிலாந்து அணியை இறுதிப் போட்டிவரை தன் தலமையில் வில்லியம்சன் அழைத்துச் சென்றார் குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்