ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் அதில் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவெடுத்தார்..
இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸி அணியில் டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் ஸ்மித் மற்றும் லபுஷான் ஆகியோர் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி சதத்தை நெருங்கிய மிட்செல் மார்ஷ் 81 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஜோஸ் 26 ரன்னிலும்,ஸ்மித் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எனவே, ஆஸ்திரேலியா அணி 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 188 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்திய அணி சார்பில் ஷமி மற்றும் சிராஜ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஜடேஜா 2 விக்கெட்டும், பாண்ட்யா 1 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், கே.எல்.ராகுல் 75 ரன்களும், ஜடேஜா 45 ரன்களும், பாண்ட்யா 25 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்குக் கைகொடுத்தனர்.
இதனால், இந்திய அணி 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.