தோனியை அடுத்து தயாரிப்பாளராகும் ஜடேஜா.. முதல் பட அறிவிப்பு..!

செவ்வாய், 7 மார்ச் 2023 (09:54 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் தோனி சமீபத்தில் தான் தயாரிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் என்பதும் ‘எம்ஜிஎம்’ என்ற டைட்டில் கொண்ட இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
 இந்த படத்தை இயக்குவதோடு இசையமைக்கவும் செய்யும் தமிழ்மணி இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். இந்த நிலையில் தோனியை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு முக்கிய வீரரான ஜடேஜாவும் தயாரிப்பாளராக உள்ளார்.
 
இவரது தயாரிப்பில் உருவாகும் முதல் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு Pachhattar Ka Chhora’  என்ற டைட்டில் க்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தில் ரந்தீப் ஹூடா மற்றும் நீனா குப்தா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் ஜெயந்த் என்பவர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்