இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியோடு இணைந்தார். இன்று பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் அவர் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது. மேலும் கடந்த போட்டியில் விளையாடாத ரோஹித் ஷர்மாவும் முழு உடல்தகுதியுடன் இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் மகேளே ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார். இரண்டு மேட்ச் வின்னர்கள் அணியில் இணைய உள்ள நிலையில் மும்பை அணி வெற்றிப் பாதைக்குத் திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.