இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விருவிருப்பாக நடந்து வருகிறது. முதலில் நடந்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 109 ரன்களில் விக்கெட்டுகளை இழந்த நிலையில் அடுத்து வந்த ஆஸ்திரேலியா 197 ரன்களை குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனால் ஆஸ்திரேலியாவிற்கு இலக்கு 76 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஒரு விக்கெட் இழப்பில் 78 ரன்களை குவித்து மூன்றாவது டெஸ்ட்டில் தற்போது ஆஸ்திரேலியா வெற்றிப் பெற்றுள்ளது.
இந்தியாவின் தோல்வி குறித்து பேசியுள்ள ரோஹித் சர்மா “இந்தியாவில் மட்டுமல்ல, எந்த நாட்டிலும் டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் வரை நடப்பதில்லை. தென்னாப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் போட்டிகள் கூட 3 நாட்கள்தான் நடந்தது. டெஸ்ட் போட்டியில் விறுவிறுப்பு இல்லை என பாகிஸ்தானை சேர்ந்த சிலர் கூறினார்கள். அதனால் போட்டியை சுவாரஸ்யமானதாக மாற்றிவிட்டோம்” எனக் கூறியுள்ளார்.