கடந்த சில ஆண்டுகளாக சி எஸ் கே அணி ரசிகர்களைப் பொறுத்தவரை அணி வெற்றி பெறுகிறதோ இல்லையோ, தோனி கடைசியாக ஒரு சிக்ஸர் அடித்து விட்டால் பைசா வசூல் எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால் இந்த சீசனில் தோனிதான் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு ஆதங்கத்தில் உள்ளனர்.
இதனால் அவர் ஓய்வு பெறவேண்டும் என்று ரசிகர்களே இப்போது அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆனால் தோனியைக் காரணமாகக் காட்டிதான் சி எஸ் கே போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது என்பது பலரும் அறிந்த ஒன்று. தோனி இல்லாவிட்டால் சி எஸ் கே அணிக்காக ஆதரவு பல மடங்காகக் குறையும் என்பதும் வெட்ட வெளிச்சமானது.