இந்த முறை ரோஹித் ஷர்மாவை விளாசிய கவுதம் கம்பீர்!

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (10:21 IST)
கடந்த சில ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

விராட் கோலி, சமீபத்தில் தன்னுடைய பார்மை மீட்டெடுத்து சிறப்பாக விளையாடி சதங்களாக குவித்து வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் திறனைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் “கிட்டத்தட்ட 50 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக ரோஹித் ஷர்மா சதமடிக்கவில்லை. அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அவரின் தரத்துக்கு ஏற்ப அவர் விளையாடவில்லை. அவர் உடனடியாக தன்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். துவக்க வீரராக களமிறங்கும் அவருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்