இதன் பின்னர் ஆடிய டெல்லி அணி கே எல் ராகுலின் அதிரடியால் வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் முதல் மூன்று ஓவர்களில் பெங்களூர் அணி 53 ரன்கள் சேர்த்தது வலுவாக இருந்தது. போட்டியில் தங்கள் தருணத்தை இழந்தது பில் சால்ட்டின் ரன் அவுட்டில்தான். இந்த ரன் அவுட்டில் கோலியின் தவறு அதிகம் எனக் கருத்துகள் எழுந்துள்ளன.
இதுவரை ஐபிஎல் தொடரில் கோலி 32 முறை ரன் அவுட்களில் காரணகர்த்தாவகா இருந்துள்ளார். அதில் 24 முறை எதிரில் நின்ற பேட்ஸ்மேன்கள் அவுட் ஆக, கோலி 8 முறை அவுட் ஆகியுள்ளார். இதனால் கோலியுடன் விளையாடுவது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயம்தான் என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.