அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இதனால் தொடர் ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட உள்ளது.
அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள ’துபாய் இண்டர்நேஷனல் மைதானத்தில்’ நடக்கவுள்ளது. லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும் அந்த மைதானத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டிகளும் பாகிஸ்தானில் நடக்காது.
இந்நிலையில் இந்த தொடரின் லீக் போட்டிகளில் இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் அவருக்கு முதுகில் வீக்கப் பிரச்சனை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஓய்வளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது