இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் அதில் சென்னை உள்பட தமிழகத்தின் எட்டு நகரங்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பணியிட கலாச்சாரம் ஆலோசனை நிறுவனம் அவதார் குழுமம் இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் குறித்து ஆய்வு செய்து அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
ஒரு நகரத்தில் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள், எந்த அளவுக்கு வேலை செய்கிறார்கள், பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைகிறார்கள், பெண்கள் முன்னேற்றத்திற்கு எந்த நகரங்களின் கொள்கைகள் வசதியாக உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் வரை நாடு முழுவதும் 60 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன.
இதில் பெண்களுக்கான சிறந்த மாநிலம் கேரளா என்றும், தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது.
அதேபோல் பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் குருகிராம் முதலிடத்திலும், மும்பை, பெங்களூரு இரண்டாம், மூன்றாம் இடத்தில் உள்ளது. சென்னை, ஹைதராபாத், திருவனந்தபுரம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பெண்களுக்கான சிறந்த நகரங்கள் பட்டியலில், சென்னை, கோவை உள்பட 8 நகரங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva