டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்!

vinoth
புதன், 3 ஏப்ரல் 2024 (07:43 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக சில ஆண்டுகளுக்கு முன்னால் அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் ஓய்வு முடிவில் இருந்து பின் வாங்கி நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் கம்பேக் கொடுத்தர். ஆனால் அந்த தொடரில் அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

 இந்நிலையில் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணித் தேர்வில் இருந்து விலகிக் கொள்வதாக ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும், தன்னுடைய பவுலிங்கை மெருகேற்றுவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்