3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

Mahendran

புதன், 16 ஜூலை 2025 (11:11 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில்லிடம், கடைசி பேட்ஸ்மேன் சிராஜ் அவுட் ஆனது குறித்து இங்கிலாந்து மன்னர் சார்லஸ் III கேள்வி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்திய அணி வீரர்கள் நேற்று இங்கிலாந்து மன்னர் சார்லஸை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, இந்திய கிரிக்கெட் போர்டு துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 
அப்போது மன்னர் சார்லஸ், சுப்மன் கில்லிடம், "கடைசி பேட்ஸ்மேனான சிராஜ் அவுட் ஆனது துரதிஷ்டவசமானது. அந்த விக்கெட் விழுந்தபோது உங்கள் உணர்வு எப்படி இருந்தது?" என்று கேட்டார். அதற்கு கில், "லார்ட்ஸ் டெஸ்ட் முடிவு  துரதிஷ்டவசமானதுதான். ஆனால், அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம்" என்று தெரிவித்தார்.
 
மேலும், "லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசி மூன்று நாளில் ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு அதிகமாக இருந்தது. உண்மையில் அது அதிர்ஷ்டம்தான். போட்டி ஐந்தாவது நாள் வரை சென்று 22 ஆண்டுகளில் தோற்றாலும், உண்மையில் இங்கே கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது" என்றும் மன்னர் சார்லஸ்ஸிடம் கில் கூறினார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்