இதில், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் 191 ரன்கள் எடுத்து, சென்னைக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.
இதில், சென்னை அணியின் வெற்றிக்காக போராட்டிய முன்னாள் கேப்டன் தோனி 16 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் தோனி பேட்டிங் வரிசையில் மேலே வந்து அதிக பந்துகளை எதிர்கொண்டு அதிக ரன்கள் சேர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட்லீ தெரிவித்துள்ளார்.
மேலும், பேட்டிங்கில் அவரிடமிருந்து அதிகம் விரும்புகிறேன். அவரது மூளை இன்னும் நன்றாகவும், கூர்மையாக உள்ளது. சென்னை கிங்ஸ் அணி நிர்வாகம் அவரை மேலே இறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.