அப்படியாக சுனாமி, புக்குஷிமா விபத்து, ராணி எலிசபெத் மரணம் உள்ளிட்டவையும் அவரது ஆரூடத்தில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் எலிசபெத் மகாராணியின் மரணத்தை தொடர்ந்து இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக பதவியேற்றார். இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அரசர் சார்லஸின் மூத்த மகன் இளவரசர் வில்லியமின் மனைவில் கேத்தரினுக்கும் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இங்கிலாந்தையும், இங்கிலாந்து ராஜ குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவம் பற்றியும் நாஸ்ட்ராடமஸ் அப்போதே அனுமானித்து எழுதியுள்ளாராம்.
அவர் எழுதியுள்ள குறிப்பில், தீவுகளின் மன்னர், மன்னருக்கான அடையாளம் இல்லாத ஒருவரால் பதவியிலிருந்து இறக்கப்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாம். வேல்ஸ் பிராந்தியத்தின் இளவரசனாகவும், இங்கிலாந்தின் அரசனாகவும் விளங்கும் சார்லஸைதான் இந்த ஆரூடம் குறிப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் மன்னருக்கான அடையாளம் இல்லாத ஒருவர் என்பது சார்லஸின் இரண்டாம் மகன் இளவரசர் ஹேரியை குறிப்பதாக கூறப்படுகிறது. இளவரசர் ஹேரி தான் காதலித்த நடிகை மேகான் மர்க்லேவை தனது அரச குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதுடன், ராஜ குடும்பத்தை விட்டும் வெளியேறி வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.