ஆஷஸ் ஐந்தாவது டெஸ்ட் தொடர்… டஃப் கொடுக்கும் ஆஸ்திரேலியா!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (07:12 IST)
ஆஷஸ் ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு முதல் நாளில் ஆட்டமிழந்தது.

அதையடுத்து ஆடிய ஆஸி அணி இரண்டாம் நாளில் 295 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 12 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 395 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸி அணியின் வெற்றிக்கு இலக்காக 384 ரன்கள் நிர்னயிக்கப்பட்டது.

இதையடுத்து நான்காவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் ஆட்டமுடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் சேர்த்துள்ளது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் 58 ரன்களோடும் உஸ்மான் கவாஜா 69 ரன்களோடும் களத்தில் உள்ளனர். ஆஸி வெற்றி பெற ஐந்தாம் நாளில் அந்த அணி 249 ரன்கள் எடுக்க வேண்டும். இதனால் இப்போட்டியில் இரு அணிகளும் வெல்வதற்கான வாய்ப்பு சம அளவில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்