நாளை சசிகலா பதவியேற்பு? சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் தயார்

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2017 (18:17 IST)
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நாளை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.


 


ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததை அடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார்.

நாளை அல்லது 9ஆம் தேதி தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது சசிகலா பதவி ஏற்பு நடைப்பெற உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதனால் சசிகலா நாளை தமிழக முதல்வராக பதவி ஏற்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்றவுடன், 6 மாத காலத்திற்குள் எம்.எல்.ஏ.வாக தொகுதியில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். இந்த முறை புதுச்சேரியில் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்கும் தேதி இன்று இரவுக்குள் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்