ஆளுநர் கூறியது ஒன்று ; மருத்துவர்கள் கூறுவது ஒன்று - நீடிக்கும் மர்மம்

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2017 (17:14 IST)
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் 2 முறை நேரில் பார்த்தார் என அப்பல்லோ மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.


 

 
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்த வரை, அவரை யாரும் நேரில் சென்று சந்திக்கவில்லை எனக் கூறப்பட்டது. மற்றவர்களால், அவருக்கு கிருமி பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அதை தவிர்த்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக கூறப்பட்டது.
 
அவருக்கு சிகிச்சை அளிக்கப்பது போல் எந்த புகைப்படத்தையும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிடவில்லை. மேலும், தமிழக அரசியல் தலைவர்கள் முதல், வெங்கய்யா நாயுடு, ராஜீவ் காந்தி வரை யாரையும் ஜெ.வை பார்க்க அனுமதிக்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனைக்கு மொத்தம் 3 முறை சென்ற தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெ.வை சந்திக்கவில்லை, மருத்துவர்களிடமே பேசினேன் எனக் கூறியிருந்தார்.


 

 
ஆனால், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது, ஆளுநர் வித்யாசாகர் 2 முறை கண்ணாடி வழியாக பார்த்தார் எனக் கூறியுள்ளனர். எனவே இந்த விவகாரம் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்