50 ஆண்டுகளுக்கு பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அதிர்ச்சியில் செயல்தலைவர்

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2017 (05:56 IST)
சுமார் ஐம்பது ஆண்டுகாலமாக அமைச்சர் பதவி என்றால் என்ன என்பதை கூட அனுபவிக்காமல் இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு தற்போது யோகம் அடித்துள்ளதாம்



 
 
ஆம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஆதரிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவிருப்பதாக ஒரு பேரம் பேசி வருவதாகவும், இதற்கு ஐந்து எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுக்க சம்மதித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
இன்னும் ஒரே எம்.எல்.ஏ ஓகே சொல்லிவிட்டால் கட்சித்தாவல் சட்டம் பாயாது என்றும் மீதியுள்ள சுமார் 3 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் முதல்வருக்கு தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவையுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கைகொடுத்தால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்பது அவரது எண்ணமாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த தகவல் செயல் தலைவரை அதிர்ச்சி அடைய செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்