ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

Mahendran

திங்கள், 12 மே 2025 (11:42 IST)
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளையொட்டி கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் ரத்ததானம் செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜெயசுதா என்ற பெண் நிர்வாகி, ரத்ததானம் செய்யும் போல் கையை நீட்டியபடி உள்ள புகைப்படம் இணையத்தில் பரவியது. இதைத் தொடர்ந்து, “நடிப்பு ரத்ததானம்” என்று கூறி நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், ஜெயசுதா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். “ரத்ததானம் செய்ய மருத்துவமனைக்கு சென்றபோது எனக்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவு 200க்கு மேல் இருப்பது தெரிந்தது. மருத்துவர்கள் எனக்கு ரத்ததானம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தினர். 
 
அதனால் நானும் ரத்ததானம் செய்யவில்லை. ஆனால், நான் ரத்ததானம் செய்ததாக எங்கேயும் பேசியதில்லை. தவறான தகவல்கள் பரவ வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
 
இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்