மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் மீண்டும் திறக்க முடிவு.. விரைவில் அறிவிப்பு..!

Mahendran

திங்கள், 12 மே 2025 (12:43 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலாக பாகிஸ்தான், ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி இந்தியாவை நோக்கி தாக்குதல் நடத்தியது. பின்னர், இந்திய தரப்பும் அதற்கு தக்க பதிலடி அளித்து அந்த தாக்குதல்களை தடுக்க முடிந்தது.
 
இந்த தாக்குதல்கள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பரபரப்பு நிலவி வந்தது. ஆனால், பாகிஸ்தான் சமரச பேச்சுவார்த்தைக்கு முன்வந்து, இருபுறமும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, மே 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குப் பிறகு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
 
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் போர் பதட்டம் காரணமாக ஏற்கனவே மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்களை மீண்டும் செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. விமான சேவைகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்