நெருப்புடன் விளையாட வேண்டாம்: ஆர்.எஸ்.எஸ்-க்கு மம்தா எச்சரிக்கை

திங்கள், 18 செப்டம்பர் 2017 (04:03 IST)
மேற்குவங்க மாநிலத்தில் வரும் 26ஆம் தேதிமுதல் 30ஆம் தேதி துர்க்கா பூஜை திருவிழா கொண்டாடவுள்ளது. இந்த மாநிலத்தில் இந்த பூஜை வெகுசிறப்பாக கொண்டாடப்படும் இந்த நிலையில் அதற்கு மறுநாளே அதாவது செப்டம்பர்ம் 1ஆம் தேதி இஸ்லாமியர்களில் மொகரம் பண்டிகையும் வருவதால் துர்க்கா பூஜை பேரணியில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக மாநில அரசின் உளவுத்துறை எச்சரித்தது



 
 
இதனையடுத்து மாநில அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஒன்றில் 30ம் தேதி மாலை 6 மணி முதல் 1ம் தேதி மாலை வரை துா்கா சிலைகளை வைத்து ஊா்வலம் நடத்த கூடாது என்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதிமன்றத்தையும் நாடியது
 
நீதிமன்றம் 30ஆம் தேதி இரவு 10 மணி வரை பேரணி நடத்தலாம் என்றும், ஆனால் 1ஆம் தேதி நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இதுகுறித்து கருத்து கூறியுள்ள முதல்வர் மம்தா, 'ஆா்.எஸ்.எஸ்., வி.எச்.பி. உள்ளிட்ட அமைப்புகள் அமைதியை சீா்குலைக்கக்கூடாது என்றும், வன்முறையில் ஈடுபட்டு நெருப்புடன் விளையாடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்