மூன்றே மாதத்தில் முடிக்க வேண்டும்: ஜெ. விசாரணை கமிஷனுக்கு தமிழக அரசு உத்தரவு

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2017 (05:08 IST)
ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களை விசாரணை செய்ய சமீபத்தில் தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து அதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி அவர்களை நியமனம் செய்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடித்து அரசுக்கு அறிக்கை தர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



 
 
ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் விசாரணை கமிஷன் அமைத்தும் எதிர்க்கட்சிகள் திருப்தி அடையாததால் தமிழக அரசு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறஅது
 
மேலும் தமிழக அரசின் இந்த உத்தரவில், 'ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் உயிரிழந்த நாள் வரையிலான காலத்தில் நடைபெற்ற அனைத்தையும் விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அறிக்கையானது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஆணையத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்