தேமுதிகவை கைப்பற்றுகிறார் பிரேமலதா விஜயகாந்த்

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2017 (07:07 IST)
கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் உள்பட அவரது கட்சியான தேமுதிகவின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்த நிலையில் கட்சி தற்போது இருக்கும் இடம் தேரியாமல் கரைந்து வருகிறது.



 
 
இந்த நிலையில் கட்சிக்கு மீண்டும் உயிரூட்ட பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் முக்கிய பொறுப்பை ஏற்பார் என்றும் விஜயகாந்த் இந்த கட்சியின் கெளரவத்தலைவராக மட்டுமே இருப்பார் என்றும், அனைத்து முக்கிய முடிவுகளையும் இனி பிரேமலதா மட்டுமே எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
 
பிரேமலதாவுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அல்லது அதைவிட முக்கிய பொறுப்பு ஒன்று காரைக்குடியில் நாளை நடைப்பெறவுள்ள தே.மு.தி.க பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய்காந்த் வழங்குவார் என்றும், இனி கட்சி பிரேமலதாவின் முழுகட்டுப்பாட்டின் கீழ் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்