மாணவி அனிதா மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார். ஆனால் அவரது போராட்டத்திற்கு பலன் கிடைக்காமல் போனது. இதனால் அனிதாவின் கனவு, லட்சியமான மருத்துவராகும் வாய்ப்பு தகர்ந்து போனது.
இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 1-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாநிலம் தழுவிய போராட்டங்கள் வெடித்தன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் கண்ணீரை மாணவி அனிதாவுக்காக சிந்தினர். அனைவரும் இறந்து போன மாணவி அனிதாவை தங்கள் வீட்டு பிள்ளைகளாகவே பார்த்து அழுதனர்.