உலகம் முழுவதும் திடீரென முடங்கிய எக்ஸ் வலைத்தளம்.. என்ன ஆச்சு?

Mahendran
திங்கள், 10 மார்ச் 2025 (18:29 IST)
உலகின் முன்னணி சமூக வலைதளமான எக்ஸ் இன்று உலகம் முழுவதும் சில மணி நேரங்கள் முடங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எக்ஸ் பயனர்கள் கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள்.
 
எக்ஸ் வலைதளம் மற்றும் செயலி ஆகிய இரண்டிலும் லாகின் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், சேவை இடையூறுகளை கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் என்ற இணையதளத்தின் தகவலின் படி, இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் பலர் எக்ஸ் செயல்படவில்லை என பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இருப்பினும், இந்த செயல் இழப்பு குறித்து எக்ஸ் நிறுவனத்திலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், அதே நேரத்தில் அரை மணி நேரத்திற்குள் மீண்டும் சேவைகள் பயன்பாட்டுக்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுபோன்ற செயல் இழப்புகளை ஏற்கனவே கடந்த ஆண்டு எக்ஸ் சந்தித்துள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு தடங்கல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்