சமீபத்தில், கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. மேலும், இந்த நிறுவனத்தில் தமன்னா பங்குதாரராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதற்கிடையில், தமன்னா தன் மீதான புகாரை மறுத்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "கிரிப்டோகரன்சி முறைகேட்டில் எனக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது போன்ற தவறான, பொய்யான தகவல்களை பரப்புவதை உடனே நிறுத்த வேண்டும் என்று எனது மீடியா நண்பர்களுக்கு வேண்டுகோள் விடுகிறேன். மேலும், இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எனது குழுவினர் எடுத்து வருகின்றனர்," என்று தெரிவித்துள்ளார்.