எடப்பாடி பழனிச்சாமியை திடீரென சந்தித்த ராஜேந்திர பாலாஜி.. மன்னிப்பு கேட்டாரா?

Siva

திங்கள், 10 மார்ச் 2025 (18:36 IST)
அதிமுகவை சேர்ந்த மாபா பாண்டியராஜன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார்.
 
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்புக்கு பின் வெளியே வந்த ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம், இது மரியாதை நிமித்த சந்திப்பு என மட்டும் கூறினார்.
 
ஏற்கனவே,  ராஜேந்திர பாலாஜியின் விமர்சனத்துக்குப் பிறகு, மாபா பாண்டியராஜன் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேந்திர பாலாஜி இன்றைய சந்திப்பின்போது எடப்பாடி பழனிச்சாமி முன் வருத்தம் தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்