கின்னஸ் சாதனை படைத்த 114 வயது முதியவர் மரணம்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (06:33 IST)
உலகின் மிக வயதான அதாவது சமீபத்தில் 114வது பிறந்த நாளை கொண்டாடிய இஸ்ரேல் நாட்டை சேர்ந்த முதியவர் நேற்று மரணம் அடைந்தார்.



 
 
போலந்து நாட்டில் உள்ள ஷார்நவ் என்ற நகரில் கடந்த 1903ஆம் ஆண்டு பிறந்த கிரிஸ்டல் என்பவர்  யூத மதத்தை சேர்ந்தவர். இவர் தனது வாழ்நாளில் 2 உலகப் போர்களையும் பார்த்தவர்
 
முதல் உலகப்போரில் தனது பெற்றோரை இழந்த கிரிஸ்டல், ஹிட்லரின் நாஜி படைகளால் மனைவி மற்றும் குழந்தைகளையும் இழந்தார். 
 
பின்னர் இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்யாமலேயே வாழ்ந்த கிரிஸ்டலுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர். இஸ்ரேல் நாட்டிற்கு வந்து தொழிலதிபரான இவருக்கு பல பேரக்குழந்தைகளும், கொள்ளுப்பேரன்களும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்