57 வருட இழுபறி: இந்தியாவிற்கு பச்சை கொடி காட்டிய உலக வங்கி!!
புதன், 2 ஆகஸ்ட் 2017 (16:30 IST)
57 வருடங்களாக இழுபறியில் இருந்த சிந்து நதி நீர்மின் திட்டத்தை உருவாக்குவதற்கு உலக வங்கி இந்தியாவிற்கு அனுமதி அளித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான 9 ஆண்டுகள் இழுபறிக்கு பின்னர் கடந்த 1960 ஆம் ஆண்டு சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் இயற்றப்பட்டது.
இந்நிலையில், ஜீலம் மற்றும் செனாப் ஆற்று பகுதியில் கிஷன்கங்கா(330 மெகாவாட்) மற்றும் ரேடில் (850 மெகாவாட்) ஆகிய நீர் மின் திட்டங்களை கட்டமைக்க இந்தியா திட்டமிட்டது.
ஆனால் இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், 57 ஆண்டுகள் நீடித்து வந்த இழுபறியில் நீர்மின் திட்டத்திற்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது.